வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (18:33 IST)

55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் விடுப்பில் செல்லுங்கள்- மும்பை காவல்துறை உத்தரவு !

மும்பையில் காவல்துறையில் பணியாற்றுகின்ற 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே நோய்பாதிப்பில் இருபோர் விடுப்பில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,974ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை  937 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது.

மும்மை காவல்துறையில் 3 காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானாவர்கள் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, 55வயதைக் கடந்த போலீஸாரும். நோய்த்தாக்கம் உள்ளவர்களும் அவர்களின் நலத்தின் பொருட்டு விடுப்பில் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.