திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (12:30 IST)

பட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொலை; சிசிடிவி வீடியோவால் பரபரப்பு!

ஹரியானாவில் இளம்பெண்ணை மர்ம நபர்கள் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் பலாப்கர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் நிகிதா தோமர். கல்லூரி முடிந்து தனது தோழியுடன் சென்று கொண்டிருந்த நிகிதாவை காரில் வந்த இருவர் இடைமறித்துள்ளனர். அதில் ஒருவன் துப்பாக்கியை எடுக்கவும் பதறிய நிகிதா ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரை தலையில் அந்த ஆசாமி சுட்டதால் சம்பவ இடத்திலேயே நிகிதா உயிரிழந்தார். தொடர்ந்து அந்த ஆசாமி தன்னுடன் வந்தவனுடன் காரில் தப்பி சென்று விட்டான்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிகிதா சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார் இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற தௌஃபிக் என்ற நபரை கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து இன்னமும் தெரியவரவில்லை.