செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (16:11 IST)

அதிர்ச்சியடைய வைத்த விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

தனது மனைவி தாமதமாக தூங்கி எழுந்து உணவு சமைப்பதாகவும், அது ருசியாக இல்லை என்றும் மும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் விவாகரத்து கேட்டு கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

 
மும்பை சாண்டாக்ரூஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் விவாகரத்து கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய மனைவி வேலைக்கு செல்வதால் இரவு நேரத்தில் தாமதமாக உணவு சமைத்து தருவதாகவும் அவை ருசியாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கு ஆதாரங்களாக அவர் தன்னுடைய பெற்றோரின் வாக்குமூலங்களையும் அளிந்திருந்தார். இந்த புகார் குறித்து அவர் மனைவி விளக்கம் அளித்தார். தான் பணிக்கு சென்று வீடு திரும்பியதும் அனைத்து வீட்டு வேலைகளையும் நானே செய்கிறேன். மளிகை பொருட்கள் வாங்குவது, சமையல், கணவரின் பெற்றோர்களை பார்த்துக்கொள்வது என அனைத்து பொறுப்புகளும் என் மீது சுமத்தப்படுகிறது என்று கூறினார்.
 
மனுதாரரின் மனைவியும் அவருக்கு ஆதரவான வாக்குமூலங்களாக அக்கம்பக்கத்து வீட்டினரிடன் கருத்துகளை தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மனுதாரரின் விவாகரத்து கோரிக்கைக்கான காரணத்தில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்தது.