திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (10:05 IST)

தன்னுடன் படித்த கல்லூரி நண்பருக்கு ரூ.1500 கோடி மதிப்புள்ள வீடு பரிசளித்த முகேஷ் அம்பானி..!

தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பருக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி 22 மாடிகள் கொண்ட ரூ.1500 மதிப்புள்ள கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை பரிசாக அளித்துள்ளார் 
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் கல்லூரி கால நண்பர் மனோஜ் மோடி. இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது இவருக்கு 1500 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திருபாய் அம்பானி அவர்கள் இருக்கும்போதே வேலையில் சேர்ந்த மனோஜ் மோடி ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிகளில் முக்கிய பங்காற்றினார் என்பதும் குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் உடனான 43 ஆயிரம் கோடி வர்த்தக ஒப்பந்தத்திற்கு முக்கிய பணியாற்றியவர் மனோஜ் மோடி என்றும் கூறப்படுகிறது. 
 
தன்னுடைய கல்லூரி கால நண்பரான மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குடும்பத்தின் பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதில் முக்கிய பங்காற்றிய நிலையில் அவருக்கு ரூ.1500 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை பரிசாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva