திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (13:05 IST)

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கிய உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி என்ற இடத்தில் ஏரியில் ஏப்ரல் 22ஆம் தேதி குளிக்கச் சென்ற பிரசாந்த் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக நேரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த செய்தி கேட்டு தான் மிகுந்த வேதனையை அடைந்ததாக கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருவரது குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார். 
 
அதேபோல் கடலூர் மாவட்டம் குமாரமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் இன்பரசன் ஆகிய இருவரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று ஏரியல் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
 
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கும் அவர்களது நண்பத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran