திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (16:29 IST)

பெற்ற குழந்தையை கொன்று வாஷிங் மெஷினில் போட்ட கொடூர தாய்...

தனக்கு பிறந்த குழந்தை பெண்ணாக இருந்ததால் விரக்தியடைந்த ஒரு பெண், அந்த குழந்தையை கொலை செய்த விவகாரம் உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
உத்திரபிரதேசம் காசியாபாத்தில் உள்ள பாட்லா என்ற நகரில் வசிப்பவர் ஆர்த்தி(22). திருமணமான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தையே பிறக்க வேண்டும் என ஆவலில் இருந்த ஆர்த்தி, பெண் குழந்தை பிறந்ததால் கடுமையான ஆத்திரத்திலும், மன உளைச்சலிலும் இருந்ததாக தெரிகிறது. 
 
அதோடு, தங்களுக்கு பெண் குழந்தை வேண்டாம்.. ஆண் குழந்தைதான் வேண்டும் என அவரின் கணவர் வீட்டார் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால், விரக்தியடைந்த ஆர்த்தி அந்த பெண் குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்து வாஷிங் மெஷினுக்குள் போட்டு விட்டார். அதன் பின், தனது குழந்தையை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
ஆனால், முன்னுக்குப் பின் பேசிய ஆர்த்தி மீது சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்தான் குழந்தையை கொன்றார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், ஆண் குழந்தைதான் வேண்டும் என தாங்கள் வற்புறுத்தவில்லை என அப்பெண்ணின் கணவர் வீட்டார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.