வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (20:47 IST)

அதிவேகத்தில் வந்த கார் மோதி தாய், மகள் பலி ....பரவலாகும் வீடியோ

Telangana
தெலுங்கானா மாநிலத்தில் அதிவேகத்தில் வந்த கார் மோதி  நடைப்பயிற்சிக்கு சென்ற தாய், மகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் நர்சிங்கி பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா. இவரது மகள் மம்தா. இவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவிதா ஆகிய மூன்று பேரும் இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

சன்சிட்டி என்ற பகுதியில் சாலையோரம் 3 பேரும் காலை  6 மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது,  அதிவேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது.

இதில், 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். தாய் மற்றும் மகள் இருவரும்  சம்பவ இடத்திலேயே பலியாகினர். கவியா படுகாயமடைந்தனர். அருகில் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவ்விபத்து பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், காரை ஓட்டி வந்தவர்கள் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.