மகளை பென்சிலால் குத்தி கடித்த தாய்- ஆன்லைன் கிளாஸைக் கவனிக்காததால் கொடுமை!

Last Updated: சனி, 24 அக்டோபர் 2020 (16:18 IST)


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காத தனது மகளை தாய் ஒருவர் கொடுமைப்படுத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகின்றன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளைக் கவனிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்காத தனது மகளை தாய் ஒருவர் கொடுமைப் படுத்தியுள்ளார்.

மும்பையை சேர்ந்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தனது மகளை ஆன்லைன் வகுப்பிற்கு தயார் படுத்தியுள்ளார். ஆனால் அந்த சிறுமியோ வகுப்புகளைக் கவனிக்காமல் விளையாட்டுத் தனமாக இருந்துள்ளார். இதனால் கோபமான அந்த தாய் பென்சிலால் அந்த பெண்ணைக் குத்தியும் கடித்தும் அவரை துன்புறுத்தியுள்ளார்.

கவல் அறிந்து வந்த குழந்தைகள் நல அமைப்பினர், அப்பெண்ணிடம் இருந்து சிறுமியை மீட்டனர். மேலும் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :