ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (05:52 IST)

வலுக்கும் 'மோரா' புயல்: எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்?

வங்கக்கடலில் வலுத்து வரும் 'மோரா' புயல் இன்று வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் ஒருசில மாநிலங்களுக்கு இந்த புயலால் பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





இந்தப் புயலால் வங்கதேசத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் ஒடிசா, அருணாச்சல்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் தீவிரமாக மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. மேலும்  வங்கக்கடலில் கடந்து போவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் இன்று வங்கக்கரையிலுள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

நேற்றுடன் கத்தரி வெயில் முடிந்துவிட்ட நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பலபகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான தட்பவெப்பத்தை நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழக மக்கள் உணர்ந்தனர்.  மேலும் இன்று முதல் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.