1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (08:17 IST)

2 லட்சம் ரூபாயை தூக்கிச்சென்ற குரங்கு

உத்திரபிரதேசத்தில் குரங்கு ஒன்று பெண்ணின் கையிலிருந்த 2 லட்சம் ரூபாய் பணப்பையை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நை மண்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பன்சால். இவர் தனது மகள் நான்சியுடன் வங்கிக்கு சென்று, தன் அக்கவுண்டில் இருந்து 2 லட்சம் ரூபாயை எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து, தன் மகளிடம் கொடுத்துள்ளார். 
 
பின் இருவரும் வங்கிக்கு வெளியே நடந்து வந்தனர். அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அதில் ஒரு குரங்கு நான்சி கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு ஓடியது.
 
இதனைத்தொடர்ந்து விஜய் பன்சாலும், பொதுமக்கள் சிலரும் குரங்கை துரத்தியவாறு ஓடினர். ஒருமாடியின் மேல் தாவிச்சென்று அமர்ந்த குரங்கு 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வீசி எறிந்தது. மீத பணத்துடன் அங்கிருந்து ஓடியது. பின் குரங்கை துரத்தி பிடிக்க முயன்றும் அது தப்பிச்சென்று மறைந்தது.
 
இதுகுறித்து விஜய் பான்சால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குரங்கின் மீது எப்படி வழக்கு பதிவு செய்தவது என போலீஸார் குழம்பி போய் உள்ளனர்.