1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (21:47 IST)

ஒடிசா முதல்வராக மோகன் மாஜி தேர்வு...! முதல் முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக..!!

Odisha CM
ஓடிசா மாநில முதலமைச்சராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசா புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
 
மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
 
24 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகினார். இந்நிலையில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்  புவனேஸ்வரில்  நடைபெற்றது. இதில் 4 முறை பாஜக எம்.எல்.ஏ.வான மோகன் மாஜி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

52 வயதான மோகன் மாஜி கியோன்ஜார் தொகுதியில் 87,000 வாக்கு வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தின் மினா மாஜியை தோற்கடித்தார். ஒடிசா புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.