தமிழர்களின் குரலை மோடியால் ஒருபோதும் ஒடுக்க முடியாது.. ஜனநாயகன் குறித்து ராகுல் காந்தி..!
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை முடக்கும் முயற்சியானது வெறும் திரைப்படத்திற்கு எதிரானதல்ல, அது தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் பேச்சுரிமை மீதான தாக்குதல் என்று அவர் சாடியுள்ளார்.
இது குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் சுதந்திரமான குரலையும் பிரதமர் மோடியால் ஒருபோதும் ஒடுக்க முடியாது" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும், திரைப்பட கலைஞர்களின் படைப்பு சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த நேரடி ஆதரவு, 'ஜனநாயகன்' பட விவகாரத்தைத் தேசிய அளவில் கவனிக்க வைத்துள்ளது.
Edited by Siva