ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2019 (10:01 IST)

இந்த வார்த்தையை கேட்டாலே ஷாக் அடித்ததுபோல் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி

ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே மின்சார அதிர்ச்சி தாக்கியது போல் சிலர் பயப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் மதுராவில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா என்ற நாட்டில் கிராம மக்களுக்கு அரசே பசுவை இலவசமாக வழங்கி வருவதாகவும், அந்த பசு ஈனும் முதல் கன்றுக்குட்டி, கால்நடை இல்லாத மற்றவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும் இந்த திட்டத்தை இந்தியாவிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
 
இந்த விழாவில் அவர் மேலும் பேசியபோது ’இந்தியாவில் ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிலர் பயப்படுகின்றனர் என்றும் இந்த வார்த்தைகள் அவர்களுக்கு மின்சார அதிர்ச்சி தாக்குவது போல் இருப்பதாகவும் தெரிவித்தார்
 
ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகள் இந்தியாவை பதினாறாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் என்று சிலர் அஞ்சுவதாக தெரிவித்த மோடி, இதுபோன்ற விமர்சனங்களை முன் வைப்பவர்கள் எப்பாடுபட்டாவது இந்தியாவை சிறுமைப்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் குற்றஞ்ட்டினார்