ஜெயிச்ச உடனே வேலையை காண்பிச்சிட்டார் மோடி: உலக சுற்றுப்பயணம் ரெடி!

Last Modified வெள்ளி, 24 மே 2019 (18:22 IST)
பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டார். ஒருசில நாடுகளுக்கு இருமுறை, மும்முறை கூட சுற்றுப்பயணம் செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் இந்தியாவில் இருந்ததைவிட வெளிநாட்டில் இருந்த நாட்களே அதிகம் என எதிர்க்கட்சிகள் கேலி செய்ததும் உண்டு
இந்த நிலையில் அடுத்த வாரம் மீண்டும் பிரதமர் பதவியேற்கவுள்ள பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவு செயலகம் திட்டமிட்டுள்ளதாம். அவர் இந்த ஆண்டு கிர்கிஸ்தான், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாம்
இந்த ஆண்டில் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர் 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக செய்திகள் வந்திருப்பதால் பெரும்பாலான நாட்கள் அவர் வெளிநாட்டில் இருக்கவே வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டில் பிரதமர் மோடியின் காலடி படாத நாடே இருக்காது என்று கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :