1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi Government Success Celebration

மோடி அரசு சாதனை விழா கொண்டாட்டம்

மோடி அரசு
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி இரண்டாண்டு முடிவடைந்துள்ள நிலையில், அதை சாதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.


 

 
மத்தியில் பாஜக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாவது ஆண்ட்டில் காலடிவைகிறது. இதைத்தொடர்ந்து மோடி அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி கூறும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதனை விளக்கும் முகாம் நடைபெற்று வருகின்றன. 
 
மேலும் சாதனை விழா நிகழ்ச்சிளி்ல் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர். அதே போல் புதுடில்லியிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மோடி அரசில் இந்தியா பொருளாதார வலிமை மிக்க நாடாக விளங்கி வருகிறது என கூறினார்.  
 
அடுத்த கட்டுரையில்
நான்காம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடத்தக்கூடாது: மத்திய அரசுக்கு பரிந்துரை