1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (19:04 IST)

என்னை பின் தொடருங்கள்… மோடிக்கு வேண்டுகோள் வைத்த இளைஞர் !

புத்தாண்டு பரிசாக டிவிட்டரில் தன்னை பாலோ செய்ய சொன்ன இளைஞரின் வேண்டுகோளை ஏற்று மோடி அவரை மகிழ்வித்துள்ளார்.

உலகளவில் அதிகளவில் ஒபாமா மற்றும் ட்ரம்ப்புக்கு அடுத்த படியாக அதிக நபர்களால் பின் தொடரப்படும் டிவிட்டர் கணக்கு பிரதமர் மோடியுடையதாக இருக்கிறது. ஆனால் அவரது கணக்கின் மூலம் அவர் 2381 பேரை மட்டுமே பாலோ செய்கிறார்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனக்கு பரிசாக தனது கணக்கை பின் தொடர வேண்டுமென அங்கிட் துபே என்ற இளைஞர் மோடியை டேக் செய்து டிவிட் செய்திருந்தார். அவரது பதிவில், ’ மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, நான் உங்கள் தீவிர ரசிகர். புத்தாண்டு பரிசாக நான் ஒன்று கேட்பேன். அதை தருவீர்களா? நீங்கள் என் ட்விட்டர் கணக்கை தயவு செய்து பின் தொடர வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். அதையடுத்து மோடி அந்த இளைஞரை பின் தொடர்ந்து அவரது வேண்டுகோளை பூர்த்தி செய்தார்.