வெளியான பிரதமர் மோடி மற்றும் 15 அமைச்சர்களின் சொத்து விவரங்கள்!!
மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என மோடி தெரிவித்திருந்தார்.
அதன் படி 92 அமைச்சர்களை கொண்ட மோடியின் அமைச்சரவையில் இருந்து 15 அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
தாக்கல் செய்யப்படுள்ள பட்டியலில் மோடிக்கு 1.41 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சா் அருண் ஜெட்லி 67 கோடியே 62 லட்சம் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுஷ்மா சுவராஜ் 5 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும், பிரகாஷ் ஜவடேகா் 1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், ராஜ்நாத்சிங், பியுஷ் கோயல், மேனகா காந்தி, ஸ்மிருதி இராணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சா்களும் தங்களது சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளனர்.