1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (16:19 IST)

கொசுவை அடித்தவர் டுவிட்டரில் இருந்து நீக்கம்!

கொசுவை அடித்து டுவிட்டரில் பதிவேற்றிய ஜப்பானியரை டுவிட்டர் தடை செய்துள்ளது.


 

 
ஜாப்பானைச் சேர்ந்த ஆண் ஒருவர் கொசுவை அடித்து அந்த புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதோடு, நான் ரிலாக்ஸாக டிவி பார்க்கும்போது என்னை கடித்து விட்டு எங்கே போற? சாவு! என டுவீட் செய்துள்ளார். இதனால் அவரை டுவிட்டர் தடை செய்துள்ளது.  
 
இதுகுறித்து அமெரிக்க வணிக இதழ் பார்ச்சூன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் அவர்கள் பக்கத்தில் பதிவிடும் தவறான மற்றும் பிரச்சனைக்குரிய வார்த்தைகளை கண்டறியும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
அது மனிதர்களால் நிர்வாகிக்கப்படுவதில்லை. அது ஒரு தானியங்கு நிரல், அதனால் நாம் தவறான வார்த்தைகளை பதிவிட்டால் அதுவாகவே தடை செய்துவிடும். இந்த முறையில்தான் அந்த நபரை டுவிட்டர் தடை செய்துள்ளது.