1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (07:32 IST)

அந்த நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அமைச்சர் எ.வ.வேலு

E V Velu
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வீட்டில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் ஒரு பக்கம் சோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த சோதனைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும்  நாடாளுமன்ற தேர்தல் அச்சம் காரணமாக  வருமான வரி சோதனை மூலம் எங்களுக்கு அச்சுறுத்தல் தரப்படுகிறது என்றும் தெரிவித்தார்

மேலும் காசா கிராண்ட், அப்பாசாமி நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நானும் திமுகவினரும் எதற்கும் பயப்பட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva