ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (23:19 IST)

பிரதமர் மோடியை புகழ்ந்த அமைச்சர் ஸ்மிருதி இராணி !

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜகா அரசு ஆட்சி செய்து வருகிறது.
எதிர்கட்சிகள் பாஜக ஆட்சி பல்வேறு விமர்சனங்கள் செய்து வரும் நிலையில், பாஜக அமைச்சர்களும்,  கூட்டணிகட்சிகளும் மத்திய அரசை புகழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமர் மோடியைப் புகழ்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவியதுடன், அம்மாநிலத்தை உலகின் அடையாளமாய மாற்றினார். அதனால் தான் மக்கள் அவரை நாட்டிற்கான பிரதமர் ஆக்கினர். தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையிலும் அவர் நாட்டிற்குச் சிறப்புடன் சேவையாற்றி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.