1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி!

smiriti
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
நேற்று தமிழகத்தில் மட்டும் சுமார் 700 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இந்தியாவை பொருத்தவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பொதுமக்கள் மட்டுமன்றி பிரபலங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன