1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (07:58 IST)

மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தனக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பதிவு செய்த டுவிட்டில் கடந்த சில நாட்களாக தனது உடல் சோர்வுடன் இருப்பதாக உணர்ந்ததையடுத்து, மருத்துவரை அணுகி சோதனை செய்ததாகவும், அதன்பின் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். 
 
தற்போது நலமுடன் உள்ளதாகவும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னிடம் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.