செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (18:15 IST)

தமிழ்நாட்டில் இன்று 5652 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 57 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும் 5,652  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,19,860  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46,633 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,64,668 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8559 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 83,699 பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 49,62,357 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 983  பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மொத்தம் 1,51,560  பேராக அதிகரித்துள்ளது.