சிறை பிடிக்கப்பட்டுள்ள 2,500 உக்ரைனிய வீரர்கள்: விடுதலை செய்ய புதினுக்கு கோரிக்கை
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் உக்ரைன் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
குறிப்பாக உக்ரைன் நாட்டை சேர்ந்த 2500 ராணுவ வீரர்கள் ரஷ்ய வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் உக்ரைனில் அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இது குறித்த செய்தி அறிந்ததும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்ட 2500 வீரர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினின் கோரிக்கை வைத்துள்ளனர்
இந்த கோரிக்கை குறித்து ரஷ்யா அதிபர் புதின் பரிசீலனை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்