வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (10:51 IST)

பள்ளிகள் திறந்தபிறகே மாணவர் சேர்க்கை! – தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 1 முதல் 9 வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் 13ம் தேதி பள்ளி தொடங்கும் நாளிலேயே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விடுமுறை நாட்களிலேயே பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறந்த பிறகே அட்மிசன் நடைபெற உள்ளது.