1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 மே 2022 (17:43 IST)

கொடிய விஷத்தைப் பயன்படுத்தும் ரஷ்ய அதிபர்

putin
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படை 90 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எனவே, ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன்,உள்ளிட்ட மேற்கத்திய  நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால், இதையெல்லாம் ரஸ்ய அதிபர் புதின் பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், தன் எதிரிகளைக் கொல்வதற்கு கொடிய  விஷத்தைப் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.

ஸ்ட்ரைக்னைன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விஷம், ரஷிய  உளவு நிறுவனமாக ஜேஜிபியால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விஷத்தை உடலில் செலுத்தினால், எலும்புகள் மற்றும் தசைகளை ஒன்றாக இணைக்கும் பிணைப்பை உடைத்து, உடல் நடடுக்கம் ஏற்படும் எனவும், பல மணி நேரத்திற்குப் பின் மனிதர்களைக் கொல்லும் எனவும் மரணம் வரை தசைகளில் வலி ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.