செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (15:14 IST)

சக வீரர்களை துப்பாக்கியால் சுட்ட வீரர்! – பஞ்சாபில் பரபரப்பு!

பஞ்சாபில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன் சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை ஒட்டிய காசா பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த படையை சேர்ந்த பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் சட்டெப்பா என்பவர் தன் சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டதில் ஜவான் பதவியில் இருந்த 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டவரும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் உடனடியாக குரு நானக் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். துப்பாக்கி சம்பவத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில் உண்மையை கண்டறிய முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.