திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (10:03 IST)

புதிதாக வந்த ரஃபேல்: விடை பெற்றது மிக்-27!

இந்தியா விமானப்படை சேவையில் இருந்து மிக்-27 விமானங்கள் ஓய்வு பெற்றன.

இந்திய விமாப்படையில் சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவை மிக் 27 ரக போர் விமானங்கள். குறிப்பாக 1999ல் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் யுத்தத்தின் போது மிக் விமானங்களின் சேவை அளப்பரியது. எதிரிகளின் ராணுவ தளவாடங்களையும், பதுங்கு தளங்களையும் துல்லியமாக தாக்கி அளித்தவை மிக் ரக விமானங்கள்.

தற்போது இராணுவத்துக்கான தொழில்நுட்பங்கள் மேம்பட்டு வரும் நிலையில் மிக்27 விமானங்கள் தொழில்நுட்பரீதியாக பின் தங்கியுள்ளன. தற்போது விமானப்படையில் சில மிக்27 ரக விமானங்களே பயன்பாட்டில் உள்ளன. ரஃபேல் விமானங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ள நிலையில் மிக் ரக விமானங்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் மிக் 27 விமானங்கள் ஓய்வு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீரை விமானங்கள் மீது பீய்ச்சி அடித்து இராணுவ வீரர்கள் விமானத்திற்கு மரியாதை செலுத்தினர்.