மெட்ரோ சேவை தொடங்குவது எப்போது? மத்திய அமைச்சர் தகவல்
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த நான்கு மாத காலத்தில் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டு உள்ளன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஓரிரு தளர்வுகள் இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்டாலும் மெட்ரோ ரயில் உள்பட போக்குவரத்துக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் தெரிவித்துள்ளார்
மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் இயக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் பயணிகளின் நெருக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெருமளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்
எனவே இன்னும் ஒரு சில நாட்களில் மெட்ரோ ரயில்கள் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது