செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (09:34 IST)

தேர்வுத் தாளில் மெஸ்சி படம்; கடுப்பான சிறுமியின் பதில்! – வைரலாகும் சம்பவம்!

Messi
கேரளாவில் பள்ளி ஒன்றில் கால்பந்து வீரர் மெஸ்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சிறுமி ஒருவர் அளித்த பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கால்பந்து உள்ளது. கால்பந்து ஜாம்பவான்களான லியோனெல் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மார், எம்பாப்பே போன்றவர்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக கேரளாவில் கால்பந்து விளையாட்டிற்கும் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மார் போன்ற வீரர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேர்வு ஒன்றில் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியனல் மெஸ்சி குறித்து கட்டுரை எழுத சொல்லி வினா இருந்துள்ளது. அதற்கு பதில் எழுதிய மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ரிசா பாத்திமா “நான் பிரேசில் நாட்டின் ரசிகை. எனக்கு நெய்மாரைதான் பிடிக்கும். மெஸ்சியை பிடிக்காது” என்று பதில் எழுதியுள்ளார்.

இந்த பதிலை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் மாணவியை அழைத்து இதுகுறித்து கேட்டபோது, வினாத்தாளில் மெஸ்சி படத்தை பார்த்ததும் இதுதான் தோன்றியது. தோன்றியதை எழுதினேன் என கூறியுள்ளார். தற்போது சிறுமியின் பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K