மதுரை முத்துப்பட்டியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி!
மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள எஸ் ஆர் ஜி இன்டர்நேஷனல் பள்ளியில் மாநில அளவிலான கால்பந்து போற்றி நடைபெற்று வருகிறது. இன்று ஒரு நாள் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை,திண்டுக்கல், தூத்துக்குடி,தேனி ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 பள்ளிகள் பங்கேற்கும் 22 அணிகள் கால்பந்து போட்டியில் பங்கேற்று உள்ளனர்.
16 வயதிற்கு உட்பட்டவர் மாணவர்கள் பிரிவு மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு என 2 பிரிவுகளாக இந்த கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. ஒலிம்பியன் மற்றும் அர்ஜுனா அவார்ட் பெற்ற ரயில்வே விளையாட்டுத்துறை அலுவலர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொண்டுள்ளார்.
மாநில அளவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட கால்பந்து போட்டி பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 5 அடி உயரம் கொண்ட கோப்பை மற்றும் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு 3 அடி உயரமுள்ள கோப்பை பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.