1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (15:28 IST)

சவூதி புரோ கால்பந்து லீக் : ரொனால்டோ விளையாடும் அல் -நாசர் அணி தோல்வி

Ronado
சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிவரும் அல் நாசர் கிளப் தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைட்டேட் அணியில் இருந்து கருத்துவேறுபாட்டினால் அந்த அணியிலிருந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ விலகினார்.

இதையடுத்து, எந்த அணியில் இணைவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சவூதி அரேபியவைச் சேர்ந்த அல் நாசர் கிளப்பில் இணைந்தார்.

தற்போது, சவூதி புரோ லீம் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில், 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றறன. இத்தொடரில் நேற்றைய போட்டியில் அல் –இத்திஹாத், அல் நசர் அணிகள் விளையாடின.

இரண்டு அணிகள் 79 வது நிமிடங்கள் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை; இருப்பினும்,80 வது நிமிடத்தில், அல் –இத்திஹாத்வீரர் ரோமரினோ ஒரு கோல் அடித்தார்.
 
இந்த அணிகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின்போது, ரொனால்டோ ஒரு கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால், எதிரணி கோல்கீப்பர் அதை தடுத்தார்.

எனவே, அல் நாசர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.  புள்ளிப்பட்டியலில், அல்-இத்திஹாத் அணி முதல் இடத்திற்குச் சென்றுள்ளது.