திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (13:32 IST)

தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென வழுக்கி விழுந்த மேனகா காந்தி: உபியில் பரபரப்பு..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக எம்பி மேனகா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென சேற்றில் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற பகுதிக்கு பாஜக எம்பி மேனகா காந்தி பிரச்சாரம் செய்வதற்கு சென்றார்.

காரில் இருந்து இறங்கி அவர் பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு நடந்து சென்ற போது அந்த பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேறும் சகதியாக இருந்தது. ஒரு இடத்தை அவர் கடக்க முயன்றபோது திடீரென சேற்றில் வழுக்கி விழுந்தார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் எந்த காயங்கள் ஏற்படவில்லை என்றும் இதனை அடுத்து அவர் முதலுதவி மற்றும் பெற்றுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

Edited by Mahendran