ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (15:19 IST)

ஜம்மு காஷ்மீர் வழக்கின் தீர்ப்பு: மெகபூபா முப்தியின் ஆவேசமான கருத்து..!

mehbooba
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு அதனை ரத்து செய்தது. அதன் பிறகு ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்றைய தீர்ப்பில் 370 ஆவது பிரிவை குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறிய போது ஜம்மு காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழக்கவோ முயற்சியை கைவிட போவதோ இல்லை என்றும் கவுரவம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் தொடரும் என்றும் இது எங்கள் பாதைக்கான முடிவு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran