1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (10:17 IST)

ஆர்.எஸ்.எஸ் பற்றி ரூ. 180 கோடி பட்ஜெட்டில் திரைப்படம்...

ஆர்.எஸ்.எஸ் பற்றி மெகா பட்ஜெட் படம் ஒன்று விரைவில் தயாராக உள்ளது.

 
பாகுபலி 2 படம் மெகா வெற்றி பெற்றதைக் கண்ட கன்னட சினிமா ஆடியோ ஜாம்பவனானனும், பாஜக ஆதரவாளருமான லாஹரி வேலு துளசி நாயுடுவிற்கு ஒரு பொறி தட்டியது. ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு சினிமாவை பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஏன் எடுக்கக் கூடாது? என்பதுதான் அது. உடனே அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது.
 
இந்த படத்திற்கு இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும், பாகுபலி படத்தின் திரைக்கதையாசிரியருமான விஜேயேந்திர பிரசாத்தே கதை, திரைக்கதை அமைத்தால் சரியாக இருக்கும் என கணிக்கப்பட்டது. அவரும் ஒத்துக்கொள்ள தற்போது அதற்காக ஸ்கிரிப்ட் ரெடி. இப்படம் ரூ.180 கோடி மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது, ஹிந்தி, தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.
 
இப்படத்திற்கு ஆர்.எஸ்.எஸ் பக்வா த்வாஜ் அல்லது ஆர்.எஸ்.எஸ் ஆகிய 2 தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தியிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவரும் திரைக்கதை அமைக்க உதவியதாக கூறப்படுகிறது. இறுதியில் உருவான கதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கும் முழு திருப்தி அளிக்க, விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம். ஆனால், இயக்குனர் யார் என இன்னும் முடிவாகவில்லை.