1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (14:57 IST)

இந்திய ராணுவத்தை விட நாங்கதான் கெத்து; கொக்கரிக்கும் மோகன் பகவத்

இந்திய ரணுவத்தை விட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் போருக்கு தயாராகிவிடும் என்று மோகன் பகவத் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
மோகன் பகவத் பீகாரில், ராணுவத்தை விட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் போருக்கு தயாராகிவிடும் என்று இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இவர் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை. சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதே இவரது முக்கிய வேலை இருந்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரானாவர்கள்.
 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உயர்வாகவும், இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்தி வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருந்தால் இந்நேரம் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவராகவோ, ஆன்ட்டி இந்தியனாகவோ முத்திரை குத்தப்பட்டு இருக்கும். 
 
இந்திய ராணுவத்தை இழிவுப்படுத்திய மோகன் பகவத் மீது எத்தனை வழக்குகள் பாயும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.