செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (07:34 IST)

தக்காளி ஒரு கிலோ ரூ.20.. போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள்..!

தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வெறும் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனையாவதை அடுத்து வரிசையில் நின்று பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர். 
 
நேரடியாக விவசாயி இடம் சென்று கொள்முதல் செய்த கடலூர் மாவட்டம் செல்லாம்குப்பம் பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர் பொதுமக்களுக்கு 20 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி செய்து வருகிறார். இதனால் கூட்டம் கூட்டமாக வந்து பொதுமக்கள் தக்காளியை வாங்கி செல்கின்றனர். மற்ற கடைகளில் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில் அவர் வெறும் 20 ரூபாய்க்கு தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை சார்பில் 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி வைக்கப்பட்ட நிலையில் அதனையும் பொதுமக்கள் விருப்பத்துடன் வாங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva