அமைச்சர் பேசும் பேச்சா இது? பெண் பத்திரிக்கையாளரை வர்ணித்த விஜயபாஸ்கர்: வைரல் வீடியோ...

Last Updated: சனி, 17 மார்ச் 2018 (09:56 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை வர்ணனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றே பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவரோ கேள்விக்கு பதில் அளிக்காமல், கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளரின் கண்ணாடி அழகாக இருப்பதாக கூறினார். அதோடு நிறுத்தாமல், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என பல முறை கூறிய பின்னர் அந்த இடத்தை விட்டு நழுவி சென்றார். 
 
தமிழக அரசின் முக்கிய பொறுப்பில், அமைச்சராக இருக்கும் ஒருவர் கேள்வி கேட்டும் பத்திரிக்கையாளரிடம் இப்படிதான் அநாகரிகமாக பதில் அளிப்பாரா? என விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
 
இதோ அந்த வீடியோ...

 


இதில் மேலும் படிக்கவும் :