கஞ்சா பயன்படுத்தலாம். மேனகா காந்தியின் பரிந்துரையை ஏற்றது அமைச்சர்கள் குழு


sivalingam| Last Modified ஞாயிறு, 30 ஜூலை 2017 (22:18 IST)
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் அதை பயன்படுத்த அனுமதி கேட்டு  சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டார்.


 
 
இந்த முன்வரைவை பரிசீலித்த அமைச்சர்கள் குழு ஒருசில மாற்றங்கள் செய்து பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சாவை மருந்து வடிவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.
 
இதுகுறித்து மேனகா காந்தி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அமெரிக்கா போன்ற நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கஞ்சா, புற்றுநோய் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் இந்த முன்வரைவை மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 


இதில் மேலும் படிக்கவும் :