விமான நிலையத்தில் சோதனை –வேர்க்கடலைக்குள் என்ன இருந்தது தெரியுமா?

டெல்லி சர்வதேச விமான நிலையம்
Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (08:15 IST)
டெல்லி சர்வதேச விமான நிலையம்

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் பயணி ஒருவர் கொண்டு வந்திருந்த வேர்க்கடலையில் டாலர் நோட்டுகள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் நடக்கும் சோதனைகளின் போது அவ்வப்போது தங்கம், மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் ஆகியவை சிக்குவது வழக்கம். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் அதுபோல சோதனையில் ஈடுபட்டபோது ஒரு நபர் தனது பை முழுவதும் உணவுப் பொருட்களை வைத்திருந்துள்ளார்.

வேர்க்கடலைக்குள் டாலர்
வேர்க்கடலைக்குள் டாலர்

இவ்வளவு உணவுப்பொருட்களா என சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரிடம் உள்ள பொருட்களை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் இருந்த வேர்க்கடலைகளை உடைத்துப் பார்த்த போது வெளிநாட்டு டாலர்கள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல அவர் வைத்திருந்த பிஸ்கட் மற்றும் இன்ன பிற பொருட்களிலும் இதுபோல டாலர் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது விமான நிலையத்தில் பரபரப்பௌ ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :