இப்படியுமா பணத்தை கடத்துவாங்க... விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி !

இப்படியுமா பணத்தை கடத்துவாங்க... விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி
sinoj kiyan| Last Modified புதன், 12 பிப்ரவரி 2020 (20:51 IST)
இப்படியுமா பணத்தை கடத்துவாங்க... விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி
டெல்லி விமான நிலையத்தில்
கடலை, சாப்பிடும் பிஸ்கட், ஆட்டிறைச்சி ஆகியவற்றில் மறைத்து வைத்து கடத்தி சென்ற நபரை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.


டெல்லி இந்திரா காந்தி சர்வதேச சர்வதேச விமான நிலையத்தில்,
இன்று துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துர்றை அதிகாரிகள் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.


அப்போது, ஒரு இளைஞரின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள்,
அவரிடம் சோதனை செய்தனர்.


அதில், கடலை, பிஸ்கட் பாக்கெட்டுகளில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஆட்டு மாமிசம் பிரித்துப் பார்த்தால் அதிலும் கரன்சிகள் இருந்துள்ளது.

அதம்பின்னர் அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது இளைஞர் பெயர், முரத் அலி என்பதும், அவர் பல நாட்டுக் கரன்சிகளை லட்சக்கணக்கில் கடத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.இதில் மேலும் படிக்கவும் :