திருட போன வீட்டில் செய்யக் கூடாததை செய்த நபர் – பிறகு நடந்த ருசிகரம் !

Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (08:15 IST)

மும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குத் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் மறுநாள் காலை போலீஸிடம் சிக்கியுள்ளார்.

மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருந்த நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் வாங்கியுள்ளார். தனது சில பொருட்களை மட்டும் அங்கே வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை எழுந்த போது புது வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் சந்தேகமடைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

இதையடுத்து போலீஸிடம் புகாரளிக்க அவர்கள் வந்து அவரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர், மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த சஞ்ஜீவ் என்பதும் திருடுவதற்காக சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் அங்கிருந்த வெளிநாட்டு உயர்ரக மதுபானங்களைப் பார்த்து மயங்கி அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் போதையில் மயங்கி அந்த வீட்டிலேயே தூங்கி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :