புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (15:30 IST)

சவாரி ரத்து செய்த பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ்கள்! ஓட்டுனர் கைது!

மும்பையைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமனாருக்காக அந்த சவாரியை ஆன்லைன் மூல்மாக முன்பதிவு செய்துள்ளார்.

மும்பையில் வசிக்கும் அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக கார் வாடகைக்கு முன்பதிவு செய்துள்ளார். ஆனால் காரில் வந்த டிரைவர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாகக் கேட்டதாகவும், காரில் குளிர்பதன வசதி இல்லாததாலும் அந்த சவாரியை அவர் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் அந்த ஓட்டுனர் கோபமடைந்து அந்த பெண் மற்றும் அவரின் கணவருக்கு தொடர்ந்த கால் செய்து தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஆபாச மெஸேஜ்களும் அனுப்பியுள்ளார். அதையடுத்து அந்த பெண் புகார்  அளிக்கவே அவரை போலிஸார் பீஹாரில் வைத்து கைது செய்துள்ளனர்.