திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (11:05 IST)

புகையிலை எச்சில் கறையைப் போக்க ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்! ரயில்வே செலவழிக்கும் தொகை!

ரயில்வேயில் பயணிகளை புகையிலை மற்றும் பான் பயன்படுத்திவிட்டு துப்புவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் ரயில்வே நிலையங்களும் ரயில்களின் ஜன்னல் பகுதிகளும் கறைகளால் படிகின்றன. இந்த கறைகள் எளிதில் அழிக்க முடியாதவை. இந்த கறைகளை அழிக்க மட்டுமே ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதை குறைக்க எச்சிலை துப்ப ரயில் நிலையங்களில் எளிதில் மக்கும் பைகளை விற்பனை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.