6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவில், தனது 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த, ஓரின சேர்க்கை துணையான ராம்பாபு யாதவை சிறுமியின் தந்தை கத்தியால் தாக்கி அவரது ஆணுறுப்பை துண்டித்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
மனைவியை பிரிந்து வாழ்ந்த அந்த நபர், ராம்பாபு யாதவுடன் ஒரு சிறிய அறையில் வசித்து வந்த நிலையில், மகளை பார்க்க வந்த சிறுமிக்கு ராம்பாபு யாதவ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த கொடூரம் தெரிந்தவுடன் ஆத்திரமடைந்த தந்தை, ராம்பாபு யாதவ்வுடன் சண்டையிட்டு அவரது ஆணுறுப்பை அறுத்து துண்டித்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த ராம்பாபு யாதவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ராம்பாபு யாதவ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தற்போது அவரது பாட்டியின் பாதுகாப்பில் உள்ளார்.
Edited by Siva