1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (16:12 IST)

லிவ் இன் காதலியை சுவற்றில் மோதி கொன்ற காதலன்! – மற்றொரு அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகாவில் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த காதலியை காதலன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த இளம்பெண்ணை அவரது காதலனே பல துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதேபோன்றதொரு சம்பவம் கர்நாடகாவிலும் நடந்துள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ஹொரமாவு என்ற பகுதியில் சந்தோஷ் தமி என்ற இளைஞரும், கிருஷ்ணகுமாரி என்ற இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். கிருஷ்ணகுமாரி அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார்.


இந்நிலையில் இன்று கிருஷ்ணகுமாரி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் கிருஷ்ணகுமாரி உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் தமியை கைது செய்து விசாரித்துள்ளனர்.

அப்போது சமீப காலமாக கிருஷ்ண குமாரிக்கும், தனக்கு வாக்குவாதம் இருந்து வந்ததாகவும், வாக்குவாதம் முற்றியதில் கிருஷ்ணகுமாரியை சுவற்றில் மோதி கொலை செய்ததாகவும் சந்தோஷ் தமி ஒத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K