1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:40 IST)

சைக்கிளில் 100 கிலோ மீட்டர் செல்ல இலக்கு… இளைஞருக்கு பாதிவழியில் மாரடைப்பு!

100 கிலோ மீட்டர் சைக்கிளில் செல்ல இலக்கு நிர்ணயித்து சென்ற குழுவில் இளைஞர் ஒருவர் பாதி வழியிலேயே மாரடைப்பு வந்து பலியாகியுள்ளார்.

கர்நாடகாவின் பிகலி பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ். படேலின் மகன் வினோத் என்பவர். இவர் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து 100 கிலோ மீட்டர் சைக்கிளிங் செல்ல முடிவு செய்துள்ளார். அந்த குழு நேற்று பகல்கோட்டிலிருந்து கேரூர் வரை செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். 

இந்நிலையில் சைக்கிள்ங் சென்று கொண்டிருக்கும் போது 40 கி மீட்டரைக் கடந்த போது, வினோத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் கிரிஷ் அவருக்கு முதலுதவி செய்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதற்கு முன்னர் சைக்கிளிங் அனுபவம் இல்லாத வினோத் அதிக தூரம் சென்றதாலேயே மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.