திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (18:09 IST)

தொடரும் அவலம்; மனைவியின் சடலத்தை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்

பீகார் மாநிலத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது இறந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்த ஷங்கர் ஷா(60) என்பவரது மனைவி சுஷீலா தேவி(50) உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சுஷீலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இதையடுத்து ஷங்கர் தனது மனைவியின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் அமரர் ஊர்த்தி கேட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்த்தி தர மறுத்துவிட்டனர். தனியார் அமரர் ஊர்த்திக்கு ரூ.2,500 கேட்டதாக கூறப்படுகிறது.
 
அவ்வளவு பணம் இல்லாததால் ஷங்கர் ஷா மகனின் உதவியோடு தனது மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச் சென்றுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பாட்னா மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
இந்தியாவில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிரது. அதுவும் குறிப்பாக வட இந்தியா பகுதியில்தான் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கிறது.