செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

பொது இடத்தில் பெண் வழக்கறிஞரை தாக்கிய நபர்: சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

advocate
பொது இடத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை பக்கத்து வீட்டுக்காரர் சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தபோது சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது
 
கர்நாடக மாநிலத்திலுள்ள பகல்கோட் மாவட்டத்தில் சங்கீதா என்ற பெண் வழக்கறிஞரை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்தேஷ் என்பவர் சரமாரியாக அடித்து உள்ளார். இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பட்டபகலில் நடுத்தெருவில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டதை சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட அந்த நபரை தடுக்கவோ உதவவோ முன்வரவில்லை 
 
அதுமட்டுமின்றி இது குறித்த வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் மஹேந்தேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்