வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (09:12 IST)

மேற்குவங்கத்தில் ஆதார் அட்டைகள் முடக்கம்.. விளக்கம் கேட்டு பிரதமருக்கு மம்தா கடிதம்..!

மேற்குவங்கத்தில் ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு பிரதமருக்கு மம்தா கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரின் ஆதார் அட்டைகள் முடக்கப்படுவதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களை தடுக்கும் விதமாக ஆதாரை முடக்கியுள்ளதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் அட்டை இல்லையென்றாலும் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், விளக்கம் கேட்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva